கொக்கி குமாரை பாத்த மாதிரி இருக்கு..! – தனுஷின் “வாத்தி” Tribute Poster!

Vaathi

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் தனுஷ்.

Vaathi

இயக்குனர் செல்வராகவனின் தம்பியான இவர் தமிழில் ”துள்ளவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் “காதல் கொண்டேன்”, “திருடா திருடி” உள்ளிட்ட படங்கள் மூலமாக புகழ்பெற்றார்.

கடந்த சில பத்தாண்டுகளுக்குள் தமிழில் இருந்து இந்தி தொடங்கி ஹாலிவுட் வரை பிரபலமாகியுள்ள தனுஷ் திரைத்துறையில் கால் பதித்து இந்த வருடத்தோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Vaathi

சரியாக இதே மே 10, 2002ல் தான் தனுஷின் முதல் படம் “துள்ளுவதோ இளமை” வெளியானது. இந்நிலையில் தனுஷின் 20 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அவர் புதிதாக நடித்து வரும் “வாத்தி” படக்குழு ஒரு Tribute Poster ஐ வெளியிட்டுள்ளனர்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh