தமிழுக்கு அனுமதியில்லை… தனுஷ் படத்தில் ஓ.டி.டி போட்ட விதிமுறை.. இது தப்பாச்சே..!

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் தன்னுடைய 54வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.

சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது. இந்த படம் போர்த் தொழில் திரைப்படம் மாதிரியே ஒரு க்ரைம் திரைப்படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஓடிடி வாரியாக சில பிரச்சனைகள் வந்துள்ளன. தனுஷின் 54வது திரைப்படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் மேல் புரொடக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான ஓடிடி விற்பனைகள் ஏற்கனவே விற்கப்பட்டன.

இந்த நிலையில் படத்திற்கான தலைப்பு வைப்பதில் ஓடிடி நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை கொடுத்திருக்கின்றன. அதன்படி படத்தின் பெயர் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். அதுவும் ஒற்றை வார்த்தைதான் இருக்க வேண்டும்.

Social Media Bar

அப்படி இருந்தால்தான் உலக அளவில் அந்த திரைப்படத்தை அவர்கள் பிரபலப்படுத்த முடியும் என்று விதிமுறை வைத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் உலக அளவில் வரவேற்பு பெற்றது.

அந்த மாதிரி வரவேற்பு பெரும்பொழுது இந்த படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் இன்னமும் அதிகமாக பிரபலம் அடையும் என்பது ஓடிடி நிறுவனங்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனாலும் தமிழ் படத்திற்கு தமிழில் பெயர் வைப்பதற்கு இது ஒரு தடையாக இருப்பதால் இப்பொழுது இந்த விதிமுறைக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.