News
மீண்டும் இயக்குனராக மாறும் தனுஷ்! – பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர் என்பதையும் தாண்டி பல விஷயங்களை செய்து வருகிறார். பாடல் பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது இப்படி பல விஷயங்களை தனுஷ் செய்து வருகிறார்.

இயக்குனராகவும் தனுஷ் வலம் வந்துள்ளார். தனுஷ் மற்றும் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த பா.. பாண்டி திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்சமயம் தனுஷ் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மட்டுமின்றி வாத்தி படத்தின் வேலைகளும் சென்றுக்கொண்டுள்ளன. இவை இரண்டும் முடிந்த பிறகு தனுஷ் இயக்கத்தில் எடுக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
