Cinema History
போய் சாவு போ. பாலசந்தர் சும்மா சொன்ன வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம்.
தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
மேலும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கியமான நடிகர்களை வளர்த்து விட்டவர் பாலச்சந்தர். பாலச்சந்தர் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கமல்ஹாசன் பகிர்ந்திருந்தார். பாலச்சந்தர் கெட்ட வார்த்தை சொல்லி யாரையுமே திட்ட மாட்டாராம்.
எப்போதும் யாராவது தவறு செய்து விட்டால் இன்று நீ செத்த என்ற வார்த்தையைதான் அதிகமாக பயன்படுத்துவார். இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வரும் பொழுது படக்குழு சென்ற வண்டி விபத்துக்குள்ளானது.
இந்த விஷயம் பாலச்சந்தருக்கு தெரிந்தவுடன் அதைப் பற்றி விசாரித்தார் அப்பொழுதுதான் சிலர் இந்த விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது யாரெல்லாம் இறந்தார்கள் என்று பாலச்சந்தர் கேட்கும்பொழுது அதில் அவரது தம்பி இறந்த விஷயம் பாலச்சந்தருக்கு தெரிந்துள்ளது.
அதற்கு முன்புதான் வழக்கமாக திட்டுவது போல அவரது தம்பியையும் நீ செத்த எனக்கூறி திட்டி இருந்தார் பாலச்சந்தர். இந்த நிகழ்வுக்குப் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் யாரையும் அப்படி அவர் திட்டியது கிடையாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.