Cinema History
சண்டை படம் மட்டும் வேணும்னா சினிமா எப்படி விளங்கும்? – ஹீரோக்களை அப்பொழுதே கேள்வி கேட்ட பாலச்சந்தர்!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரும் நடிகர்களை தமிழ் சினிமாவில் வளர்த்துவிட்ட பெருமை பாலச்சந்தரையே சாரும்.

அதே போல பெண்களை மட்டும் முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது வரை பல நாடகங்களில் தைரியமான பெண்களாக காட்டப்படும் பெண்கள், கிட்டத்தட்ட பாலச்சந்தர் படத்தில் வரும் பெண்களை ஒத்திருப்பதை காணலாம்.
ஆனால் சினிமா துறை வளர்ந்த பிறகு அப்படியான படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போனது. கதாநாயகர்களுக்கான படங்களே அதிகமாக வர துவங்கின. வெறும் சண்டை காட்சிகள் மட்டும் உள்ள படங்களே அதிக ஹிட் கொடுத்தன.
இதுக்குறித்து அந்த சமயத்தில் பாலச்சந்தரிடம் கேட்டபோது “நான் சினிமா எடுத்த காலக்கட்டங்களில் எந்த விதமான திரைப்படத்தையும் எடுப்பதற்கான சூழல் தமிழ் சினிமாவில் இருந்தது. ஆனால் தற்சமயம் கதாநாயகர்கள் சொல்லும் கதைகளைதான் இயக்குனர்கள் படமாக்கும் நிலை உள்ளது. இப்படியே செல்வது தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல” என கூறி அப்போதே கடுமையாக தமிழ் சினிமாவை விமர்சித்துள்ளார்.
பாலச்சந்தர் கூறியது போல இப்போது ஒரு கதாநாயகியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படம் எடுப்பது என்பது கடினமான ஒரு காரியமாகவே ஆகிவிட்டது எனலாம்.
