விஜய் படத்திலிருந்து விலகிய இயக்குனர்! காரணம் இந்த நடிகரா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் “தளபதி 66” படத்திலிருந்து பிரபல இயக்குனர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathi 66

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு விஜய்யின் அடுத்த படமான “தளபதி 66”க்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குனர் வம்சியின் முந்தைய தமிழ் படமான தோழா படத்திற்கு இயக்குனர் ராஜூ முருகன் வசன கர்த்தாவாக பணியாற்றினார். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூ முருகன் “தளபதி 66” படத்தின் வசன கர்த்தாவாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கார்த்தி நடிப்பில் இயக்குனர் ராஜூ முருகன் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதால் விஜய் பட ப்ராஜெக்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Refresh