நான் அடுத்து எடுக்கும் படத்தில் அந்த விஷயம் இல்ல.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் திரைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இப்பொழுது ஒரே மாதிரியான கதை அமைப்புக்குள் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
பெரும்பாலும் கடத்தல் என்கிற விஷயம் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம் எடுப்பது கடினம் என்கிற நிலை உண்டாகி இருக்கிறது. இதற்கு முன்பு lcu என்கிற பாணியில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்ததால் ஒவ்வொரு படமும் இன்னொரு திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என இருந்தது.

எனவே தொடர்ந்து கடத்தல் தொடர்பான விஷயங்கள் கதையில் வைக்கிற மாதிரியே அவரது திரைப்படங்கள் இருந்தது. ஆனால் அதற்கு தொடர்பு இல்லாமல் எடுக்கப்பட்ட லியோ, கூலி ஆகிய திரைப்படங்களிலும் கூட கடத்தல் இல்லாமல் ஒரு கதையை லோகேஷ் கனகராஜால் எழுத முடியவில்லை.
தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பால் லோகேஷ் கனகராஜ் இப்படியான கதைகளை எழுதி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பதை ஓரமாக வைத்துவிட்டு ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான படம் எடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அடுத்து நான் எடுக்கும் திரைப்படம் அப்படியானதாகதான் இருக்கும் என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்து இருக்கிறார்.