எனக்கு இருக்கும் நிறைவேறாத ஆசை.. சயின்ஸ்க்கே ஷாக் கொடுத்த இயக்குனர் பிரேம்.!
தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குனராக இயக்குனர் பிரேம் இருந்து வருகிறார்,
பிரேம் இயக்கிய 96 மற்றும் மெய்யழகன் இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வெகுமான வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும் எப்போதும் ரத்தம் துப்பாக்கி என்ற திரைப்படங்களை எடுப்பதற்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கின்றனர்.
ஆனால் இயல்பு வாழ்க்கையில் மனிதர்களின் உணர்வுகளை படமாக்குவதற்கான இயக்குனர்கள் மிக மிக குறைவாகவே தமிழ் சினிமாவில் இருக்கின்றார்கள். இதனாலேயே இயக்குனர் பிரேமுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு.

இயக்குனர் பிரேமின் ஆசை:
ஒரு சாதாரண மனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக காட்டுவது என்பது கடினமான விஷயமாகும். அதனை மிக எளிதாக செய்யக்கூடியவர் பிரேம். இந்த நிலையில் தனக்கு கதைகள் உருவாவதற்கான முக்கிய காரணம் தனக்கு இருக்கும் நிறைவேறாத ஆசைதான் என்று கூறி இருக்கிறார்.
அது பற்றி பிரேம் கூறும் பொழுது காலம் கடந்து பயணிக்க கூடிய கால எந்திரம் ஒன்று வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசை நிறைய வாழ்க்கையில் தவறவிட்ட பல தருணங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பள்ளியின் இறுதி நாளின் பொழுது இன்னும் கொஞ்ச நேரம் மாணவர்களுடன் இருந்து விட்டு வந்திருக்கலாம். கடைசியாக மாணவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் பொழுது இன்னும் கொஞ்சம் நேரம் சேர்ந்து விளையாடி இருக்கலாம் என்றெல்லாம் இப்பொழுது தோன்றுகிறது.
மீண்டும் போய் அவர்களுடன் இன்னும் சில நேரங்களை செலவிட்டு விட்டு வந்து விடுவேன் என்று கூறுகிறார். இவற்றின் தாக்கங்களாக தான் என்னுடைய திரைப்படத்தில் பல விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.