நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ராம் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் சீரியஸான கதைக்களத்தை கொண்டவை.

அப்படியிருக்கும்போது நடிகர் சிவா எப்படி ராம் படத்தில் நடிக்கிறார் என்பது பலருக்குமே வியப்பாக இருந்தது. இந்த நிலையில் பறந்துப்போ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உறவை நகைச்சுவை வழியாக வழியுறுத்துகிறது பறந்து போ திரைப்படம்

தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் பறந்து போ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் ராம். அதில் நடிகர் சிவாவும் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் படம் குறித்து கேள்வி கேட்காமல் தொடர்ந்து சர்ச்சையான கேள்விகளை கேட்டு வந்தனர்.

Social Media Bar

இது ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் ராமிற்க்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. அவர் பேசும்போது நீங்கள் பேசிய விஷயங்களை நான் தப்பாகதான் எடுத்துக்கொண்டேன். 6 வருடத்திற்கு பிறகு ஒரு படம் எடுத்திருக்கேன்.

அது கொண்டாடப்படும் நிலையில் அதன் வெற்றியை நாங்கள் கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் இங்கு வந்து கேட்ட கேள்விகள் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளிப்படையாக கூறிவிட்டார் இயக்குனர் ராம்.