முடிச்சு விட்டிங்க போங்க.. நிஜமாவே அந்த படத்தின் காபியா.. கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு?
இந்தியன் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் கதைப்படி பார்த்தால் ராம்சரண் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். அதே சமயம் நடிகர் எஸ்.ஜே சூர்யா ஒரு மோசமான அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் கமிஷன் அதிகாரியாக வரும் ராம் சரண் எஸ்.ஜே சூர்யாவுக்கு எதிராக என்ன மாதிரியான சட்டங்களை கொண்டு வருகிறார். அதனால் எஸ்.ஜே சூர்யா எப்படி பாதிக்கப்படுகிறார் மேலும் எஸ்.ஜே சூர்யா அதற்காக பழிவாங்க செய்யப்போகும் விஷயங்கள் எல்லாம் கதையாக நீள்கிறது.
ராம் சரண் மற்றும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. பாடல்கள் எல்லாமே அதிக பட்ஜெட்டுக்கு தயாராக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட விஜயகாந்தின் தென்னவன் படத்தின் கதையோடு ஒத்து போவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இயக்குனர் ஷங்கரின் பிரமாண்டம் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. எனவே அது படத்தின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.