சர்தார் போட சொல்லி வற்புறுத்தாதீர்கள் ! – வருத்தத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

வருகிற தீபாவளியை முன்னிட்டு அடுத்து திரையரங்குகளில் சர்தார், பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

எனவே தீபாவளி அன்று சர்தார் வெளி ஆவதற்கு அதிகமான திரையரங்குகளை பிடிக்கும் வேளையில் உள்ளது ரெட் ஜெயண்ட். தமிழில் வசூல் சாதனை செய்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்சமயம் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடி வருகிறது.

தீபாவளிக்கு பிறகும் கூட 180 திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் அந்த திரையரங்குகளையும் சர்தார் படத்திற்காக டார்கெட் செய்கிறதாம்.

பொதுவாக திரைப்படங்கள் வெளியாகி நான்காவது வாரத்தில்தான் திரையரங்குகளுக்கு 40 சதவீதம் பங்குகள் கிடைக்கும். தீபாவளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் நான்காவது வாரமாக ஓடி கொண்டிருக்கும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் கொஞ்சம் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

எனவே சர்தாரை வெளியிட சொல்லி வற்புறுத்துவது குறித்து அவர்கள் வருத்தம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

Refresh