சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து… உயிரிழந்த ஸ்டண்ட் மேன்.. தமிழ் சினிமாவில் தொடரும் அநீதி!..
கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சர்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு அப்பொழுதே திட்டமிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தற்சமயம் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் படத்தின் இயக்குனரான பி.எஸ் மித்ரன். இந்த திரைப்படத்திலும் கார்த்தி இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் ராஷி கண்ணா முனிஷ்காந்த் போன்ற முதல் பாகத்தில் இருந்த பிரபலங்கள் பலரும் நடித்து…
