இப்படி ஒரு சீனே புக்குல கிடையாதே – கேள்வி எழுப்பும் வாசகர்கள்

நாளை மறுதினம் 30.09.2022 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஜெயம் ரவி ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்திலும், விக்ரம் ராஜ ராஜனின் அண்ணன் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மக்களிடையே இருந்த அதிக வரவேற்பு காரணமாக 30 ஆம் தேதிக்கான அனைத்து காட்சிகளும் அதிகப்பட்சம் புக்கிங் ஆகிவிட்டன. படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் அவ்வபோது சில காட்சிகள் வெளியாகி வருகின்றன. அப்படியாக ஒரு காட்சியில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மூன்று பேரும் சேர்ந்து குதிரையில் செல்வது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஆனால் பொன்னியின் செல்வன் கதையில் மூன்று பேரின் கதையும் தனி தனியாக செல்லும். வந்திய தேவனும், ராஜ ராஜ சோழனும் இணைந்து பல காட்சிகள் இருக்கின்றன. ஆனால் புத்தக கதைப்படி ஆதித்ய கரிகாலன் இவர்களோடு வருவது போன்ற எந்த சந்தர்ப்பமும் இல்லை. அப்படி இருக்கும்போது மூவரும் வருவது போன்ற காட்சியை படத்தில் எப்படி வைத்தனர் என புத்தக வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனவே புத்தகத்தில் இருந்து சில விஷயங்களை இயக்குனர் மணிரத்னம் மாற்றி அமைத்திருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்ய கரிகாலன் ஏற்கனவே பாண்டிய மன்னனுடன் சண்டையிட்ட கதைகள் வரும். ஒருவேளை இது அந்த காட்சியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Refresh