News
படம் வரைஞ்சி தந்ததுக்கு நன்றி நண்பா – பதில் அளித்த தனுஷ்
நாளை செப்டம்பர் 29 அன்று இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மொத்தம் இரண்டு தனுஷ் இருக்கின்றனர். அதில் ஒரு கதாபாத்திரம் சீரியல் கில்லர் கதாபாத்திரமாக உள்ளது. படத்தின் ட்ரைலரே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் படம் பார்ப்பதற்கு ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பது போல் இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் வெகு காலத்திற்கு பிறகு தமிழில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்று படம் நடித்த ஒரு முக்கிய நடிகராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் மற்றும் செல்வராகவனின் ரசிகர்கள் நானே வருவேன் திரைப்படத்திற்காக வெகுவான எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவர் நானே வருவேன் திரைப்படம் ட்ரைலரில் வரும் காட்சி ஒன்றை காமிக் புகைப்படமாக வரைந்து அசத்தியுள்ளார். ட்ரைலரில் வரும் பல்வேறு காட்சிகளை ஒழுங்குப்படுத்தி மிக நேர்த்தியாக அந்த படம் வரையப்பட்டுள்ளது. அந்த படத்தின் கீழ் கமல் என எழுதப்பட்டுள்ளது. அதை வைத்து பார்க்கும்போது கமல் என்னும் ஓவியரே இந்த படத்தை வரைந்துள்ளார் என தெரிகிறது.
இதை கண்ட நடிகர் தனுஷ், படம் வரைந்த அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்து இந்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
