பொன்னியின் செல்வன் பாகம் 1 முழுக்கதை என்ன? – கதை சுருக்கம்

வருகிற 30 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கும் பிரமாண்டமான திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். தமிழ் திரை உலகிலேயே பல வருடங்களாக இந்த படத்தை பல இயக்குனர்களும் எடுக்க நினைத்தனர். ஆனால் அதை இயக்குனர் மணிரத்னம் சாதித்துள்ளார்

பொன்னியின் செல்வன் கதை என்ன என பார்த்தோம் என்றால் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே உள்ள சண்டையை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது.

சோழ தேசத்தை ஆளும் சுந்தர சோழருக்கு (பிரகாஷ் ராஜ்) மொத்தம் 3 பிள்ளைகள் ஆதித்ய கரிகாலன் (விக்ரம்), குந்தவை (த்ரிஷா), அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி). சோழ தேசத்திற்கு அருகே ஒரு விண்மீன் செல்கிறது. இதனால் சோழ குடும்பத்தில் ஒருவர் இறக்க போவதாக சோதிடர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருக்கும் சுந்தர சோழருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது.

அதே சமயம் பாண்டியர்களால் சோழ தேசத்திற்கு பிரச்சனை வர இருக்கிறது. இதை முன்னரே அறிந்த ஆதித்ய கரிகாலன் தான் பல்லவ தேசத்தில் இருப்பதால் தன் தங்கை குந்தவையிடம் செய்தியை கூறுவதற்காக தனது உயிர் நண்பன் வந்திய தேவனை (கார்த்தி) அனுப்புகிறான். 

ஏன் ஆதித்ய கரிகாலனே சோழ தேசம் வரலாமே என நீங்கள் கேட்கலாம். ஆதித்ய கரிகாலன் தனது இளமை காலத்தில் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) என்கிற பெண்ணை காதலித்து இருப்பான். ஆனால் அவள் பாண்டிய மன்னனை காதலித்து இருப்பாள். ஆனால் ஆதித்ய கரிகாலன் அவள் முன்னிலையிலேயே பாண்டிய மன்னனை வெட்டி சாய்த்திருப்பான். எனவே அதற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக சோழ தேசத்தின் மிக முக்கிய புள்ளியான பெரிய பளுவேட்டையரை (சரத்குமார்) திருமணம் செய்திருப்பாள் நந்தினி.

பெரிய பளுவேட்டையர், சின்ன பளுவேட்டையர் (பார்த்திபன்) இருவருமே தலைமுறை தலைமுறையாக சோழ தேசத்திற்காக பணிபுரியும் விசுவாசிகள்.

இந்நிலையில் சோழ தேசம் வீழ்வதற்கு பாண்டியர்களுக்கு உதவி செய்பவர்களில் ஒருவராக நந்தினி இருக்கிறார். இவை அனைத்தையும் துப்பு துலக்கி கொண்டே வருகிறான் வந்திய தேவன். இந்நிலையில் தஞ்சையில் உள்ள குந்தவை, நாட்டை பாதுக்காக்க என் தம்பி ராஜ ராஜ சோழனால்தான் முடியும். ஆனால் அவன் இலங்கையில் போர் செய்து வருகிறான். அவனை அழைத்து வா என வந்திய தேவனை அனுப்புகிறாள். இதற்கு இடையே வந்திய தேவனுக்கும், குந்தவைக்கும் காதல் ஏற்படுகிறது. வந்திய தேவனின் பயணத்தில் அவனுக்கு துணையாக வரும் மற்றொரு கதாபாத்திரம் ஆழ்வார்கடியான் நம்பி (ஜெய்ராம்)

இலங்கை செல்லும் வந்திய தேவன் எப்படி ராஜ ராஜ சோழனை அழைத்து வந்து, சோழ தேசத்தை காப்பாற்ற போகிறார் என்பதே பாக்கி கதை.

ஆக எப்படி இருந்தாலும் பொன்னியின் செல்வன் ஒரு சிறந்த படமாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh