தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார்.
பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலுமே கூட சினிமாவை தாண்டி அவருக்கு கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து அதன் மீது ஈடுபாடு செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெரும்பாலும் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்காத அஜித் தற்சமயம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.
மேலும் அஜித் பேசி இருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கிறது ஒன்றிய அரசு கண்டிப்பாக உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறேன்.
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் தான் நாம் அனைவருமே பாதுகாப்பாக இருக்கிறோம். எனவே அனைத்து மதங்களையும் சாதிகளையும் மதிக்க வேண்டும்.
நமக்குள் எந்த ஒரு மோதலும் இருக்கக் கூடாது. வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறியிருக்கிறார் நடிகர் அஜித். மதம் சார்ந்த இந்த கலவரத்தின் காரணமாக பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் அஜித் இந்த மாதிரி கருத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.