ஒரே படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

ப்ளோரிடாவை சேர்ந்த மார்வெல்லின் திரைப்படத்தை அதிக தடவை பார்த்து சாதனை புரிந்துள்ளார்.


மார்வெல் ஸ்டியோஸின் சூப்பர் ஹீரோ படங்களில் கடைசியாக வந்து உலகம் முழுக்க ஹிட் கொடுத்த திரைப்படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்.

மார்வெல்லுக்கு முன்பு சோனி ஸ்பைடர்மேன் எடுத்த காலம் முதலே அதற்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிக பட்டாளங்கள் கூடிவிட்டன.

இந்நிலையில் ஃப்ளோரிடாவை சேர்ந்த ரெமாரியோ என்பவர் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை அதிக முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் 16.12.2021 இல் துவங்கி 15.03.2022 வரை 3 மாதங்களில் மொத்தமாக 292 முறை திரையரங்கில் பார்த்துள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் 2,59,642 ரூபாயை இவர் டிக்கெட்டிற்காக செலவு செய்துள்ளார்.


இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை 191 முறை பார்த்த அர்னாட் க்ளின் என்பவரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

Refresh