Latest News
கல்யாண தேதியை அறிவித்த கெளதம் கார்த்திக்! – தொடர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்யும் குடும்பம்!
நடிகர் கார்த்தியின் மகனான கெளதம் கார்த்தி திரை துறையில் சில படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் இவர் தமிழுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கவுதம் கார்த்திக் , முத்தையா இயக்கிய தேவராட்டம் எனும் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடித்தார். இந்நிலையில் மஞ்சுமா மோகனுக்கும், கெளதம் கார்த்திக்கும் இடையே காதலானதாக கூறப்படுகிறது.
வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்சமயம் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். வருகிற 28 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
மூன்று தலைமுறைகளாக கெளதம் கார்த்திக்கின் குடும்பம் திரை துறையில் இருந்து வருகிறது. அவரது தாத்தா எஸ்.பி முத்துராமன் சுலோச்சனா என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்தார்.
அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் சாதி, மொழி என இரண்டும் வேறுப்பட்டு கர்நாடகாவை சேர்ந்த ராகினியை திருமணம் செய்துக்கொண்டார். அந்த வகையில் தற்சமயம் கெளதம் கார்த்திக்கும் கூட மலையாள பெண்ணான மஞ்சுமா மோகனை திருமணம் செய்ய உள்ளார்.