கல்யாணம் முடிந்தது? – போட்டோ வெளியிட்ட கெளதம் கார்த்தி – மஞ்சுமா மோகன்

நடிகர் கார்த்தியின் மகனான கெளதம் கார்த்தி திரை துறையில் சில படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் இவர் தமிழுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கவுதம் கார்த்திக் , முத்தையா இயக்கிய தேவராட்டம் எனும் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடித்தார். இந்நிலையில் மஞ்சுமா மோகனுக்கும், கெளதம் கார்த்திக்கும் இடையே காதலானதாக கூறப்படுகிறது. 

வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்சமயம் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று அவர்களது திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது.

3 தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வருகிறது. அந்த வழியில் தற்சமயம் கெளதம் கார்த்திக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார்.

தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் தங்களது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh