News
நிறைய காட்சிகளை புதுசா சேர்க்க போறேன்? – பாபா ரீ-ரிலீஸ் குறித்து ரஜினியின் அப்டேட்!
2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்தின் திரைக்கதையை நடிகர் ரஜினிகாந்தே எழுதி நடித்திருந்தார். பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார்

ஆனால் வெளியான காலக்கட்டத்தில் பாபா திரைப்படம் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பாபா திரைப்படம் பலருக்கும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் கூட இடையில் பாபா திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்த நிலையில் தற்சமயம் வெளியான காந்தாரா திரைப்படத்தின் வெற்றியை கண்ட ரஜினிகாந்த், பாபா திரைப்படத்தை மீண்டும் வெளியிட்டால் ஹிட் அடிக்கும் என நம்புகிறார். இதற்காக மெருகேற்றப்பட இருக்கிறது பாபா திரைப்படம்.
முழு படத்தையும் மீண்டும் கலர் கரெக்ஷன், வி,எஃப் .எக்ஸ் வேலைகள் செய்து மாற்றி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது படத்தில் கட் செய்யப்பட்ட பல காட்சிகளை சேர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது பாபா. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும், படத்தின் பாடல்களை இப்போது காலக்கட்டத்திற்கு ஏற்றாற் போல மாற்றி இசையமைக்க உள்ளார்.
இதனால் பாபா திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
