Actress
கதாநாயகி ஆக தயாராகிட்டேன்? – மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் அனிகா
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பரிச்சையமானவராக ஆனார் அனிகா.

ஜெயலலிதாவின் கதையை அடிப்படையாக கொண்டு கெளதம் மேனன் எடுத்த குயின் வெப் தொடரில் இவருக்கு பள்ளி பருவ ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினி துறையில் இவர் வளர்வதற்கு இது முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

மீண்டும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார் அனிகா.

இதையடுத்து தற்சமயம் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார் அனிகா.

