News
இன்னொரு கர்ணனா மாமன்னன்? – கேள்வியை எழுப்பும் ப்ரோமோ!
உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் நட்சத்திரம் என்பதையும் தாண்டி முக்கியமான பிரபலம் ஆவார். இவர் நடித்த சில படங்கள் தமிழில் ஹிட் கொடுத்துள்ளன.
மேலும் படங்களை தயாரிப்பது மற்றும் வெளியிடுவது போன்ற வேலைகளையும் உதயநிதி செய்து வருகிறார். தற்சமயம் இவர் நடித்து வெளியான கலக தலைவன் திரைப்படமும் மக்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிலையில் நேற்று உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்து நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியானது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுக்குறித்து ஏ.ஆர் ரகுமான் கூறும்போது முதன் முதலாக உதயநிதி, மாரி செல்வராஜூடன் படம் செய்வது நன்றாக இருந்தது என கூறினார்.
படத்தின் ப்ரோமோ பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கர்ணன் படம் போலவே இருந்தது. கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கையில் கத்தி வைத்துக்கொண்டு நிற்பது போன்ற காட்சி இருக்கும். கிட்டத்தட்ட அதே போலவே ஒரு காட்சி இந்த படத்திலும் வருகிறது.
எனவே கர்ணன் பட சாயலிலேயே இந்த படம் இருக்குமோ என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ப்ரோமோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
