குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
அதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் படத்தை கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாடு அளவில் மதுரை மாதிரியான சில இடங்களில் முதல் ஷோ வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் நிறைய திரையரங்குகள் 12 மணி காட்சியிலிருந்து தான் பட காட்சிகளே துவங்கியது. அதனால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக தான் வந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 28.50 கோடி ரூபாய்க்கு ஓடி இருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம்