ஆட்டோ பிடிச்சா வீட்டுக்கு வந்துற போறான்? – முக்கிய நடிகையை கலாய்த்த கவுண்டமணி!

சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி.

செந்திலும், கவுண்டமணியும் ஒரு திரைப்படத்தில் காமெடியனாக நடிக்கிறார்கள் என்பதற்காகவே அந்த படத்தை மக்கள் பார்க்க வந்த காலங்களும் உண்டு.

சில காலங்களுக்கு பிறகு கவுண்டமணி செந்திலை விட்டு படத்தின் ஹீரோக்களோடு கூட்டணி போட்டு நடிக்க துவங்கினார். அப்படி நடித்த கூட்டணியிலும் கூட கவுண்டமணி நல்ல வரவேற்பே கிடைத்தது.

அப்படியாக ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பலருடன் கூட்டணி போட்டு நடித்துள்ளார் கவுண்டமணி. 

ஒருமுறை முக்கிய நடிகை ஒருவரின் தம்பி, ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் கவுண்டமணியும் நடித்திருந்தார். எனவே அந்த கதாநாயகி கவுண்டமணியிடம் வந்து “அண்ணே என் தம்பி நல்லா வந்துருவானா? அண்ணே” என கேட்டுள்ளார்.

அதற்கு கவுண்டமணி “அதுக்கு என்னம்மா ஆட்டோ புடிச்சா நல்லப்படியா வீடு வந்து சேர போறான்” என கூறி கலாய்த்துள்ளார். இந்த விஷயத்தை நடிகர் சத்யராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Refresh