சீரியல் கில்லராக மாறும் பொம்மை! –  மேகன் படம் எப்படி இருக்கு?

ஹாலிவுட்டில் பிரபலமான பேய் படம் என கேட்டால் பலரும் கூறும் படமாக கான்ஜுருங் திரைப்படம் இருக்கும். இந்த மாதிரியான பேய் படங்களை எடுப்பதற்கு என்று புகழ்பெற்ற இயக்குனர்தான் ஜேம்ஸ் வான்.

இவர் இயக்கிய பேய் படங்கள் எல்லாமே ஹாலிவுட்டில் ஹிட் தான். தற்சமயம் இவர் கதை எழுதி ஜெரால்ட் ஜான்ஸ்டோன் என்ற இயக்குனர் இயக்கத்தில் தயாராகி இன்று வெளியான திரைப்படம்தான் மேகன்.

படத்தின் கதைப்படி கேடி என்கிற பெண்ணை வைத்து மொத்த கதையும் செல்கிறது. கேடியின் பெற்றோர் ஒரு கார் விபத்தின் இறக்கின்றனர். இதனால் கேடி மிகவும் தனிமையாக உணர்கிறாள். இதனால் எப்போதும் சோகமாக இருக்கிறாள்.

இந்த சமயத்தில் ஆண்ட்ராய்டின் புதிய தொழில்நுட்பத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு ரோபோ தயாரிக்கப்படுகிறது. அதுதான் மேகன். மேகனால் மனித உணர்வுகளை புரிந்து நடந்துக்கொள்ள முடியும் என்பதால் அதை கேடியுடன் பழக விடுகின்றனர்.

ஆனால் போக போக கணினி போல அல்லாமல் மனிதர்களின் கட்டளைகளை மீறி சுயமாக யோசிக்க துவங்குகிறது மேகன். கேடிக்கு யாராவது சின்ன தொல்லை கொடுத்தாலும் அவர்களை கொலை செய்யும் அளவிற்கு செல்கிறது மேகன்.

மேலும் அது கேடியுடன் நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. அதற்கு இடையூறாக வருபவர்களை அழிக்கிறது. இதை எப்படி சரி செய்ய போகிறார்கள். கேடியை எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்பதே படத்தின் கதை.

ஹாரர் காட்சிகள் படத்தில் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஆரம்பத்தில் மிகவும் அழகாக தெரியும் மேகன், போக போக அகோரமாக மாறுகிறது. அவள் செய்கைகள், செய்யும் கொலைகள் எல்லாம் மேகனை ஒரு பேய் போல நம் முன் காட்டுகிறது.

உண்மையிலேயே ஒரு பொம்மையை வைத்து படம் எடுத்தது போன்ற உணர்வை படம் கொடுத்திருந்தது.

இந்த படத்திற்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தை குறித்து நேர்மறையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

Refresh