Connect with us

குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story

Hollywood Cinema news

குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story

Social Media Bar

Pierre Boulle என்னும் நபரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதைதான் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ். இந்த கதையின் மையக்கரு என்னவென்றால் வருங்காலத்தில் ஏப்ஸ் எனப்படும் குரங்குகளுக்கு மனிதனை போலவே அறிவு வந்துவிட்டால் அது மனிதனுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கொடுக்கும் என்பதைதான் இந்த நாவல் விளக்குகிறது.

இந்த கதை பிடித்து போய் பலரும் இதை படமாக்கியுள்ளனர். அந்த வகையில் பொதுவாக வெளியாகும் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ் திரைப்படங்களில் ஏற்கனவே வருங்காலத்தில் ஏப்ஸ் உலகத்தை ஆண்டுக்கொண்டிருக்க அங்கு மனிதர்கள் படும்பாடு என்றுதான் கதை இருக்கும். ஆனால் 2011 முதல் எடுக்கப்பட்ட இந்த நான்கு பாகங்களில்தான் பூமியில் மனித இனம் வீழ்ந்து எப்படி ஏப்ஸ் இனம் தலை தூக்குகிறது என்கிற கதை வருகிறது. அதில் முதல் பாகத்தின் கதையை பார்க்கலாம்.

Rise of the Planet of the Apes:

Rise of the Planet of the Apes திரைப்படம்தான் 2011 ஆம் ஆண்டு வந்த முதல் திரைப்படமாகும். இந்த படத்தின் கதைப்படி சான் பிரான்ஸிஸ்கோவில் ஜென் சிஸ் எனப்படும் ஆய்வகத்தில் அல்சைமர் நோய்க்கான மருந்தை கண்டுப்பிடிக்கும் சோதனையில் இருக்கின்றனர். அதனை சிம்பன்ஸி குரங்கின் மீது சோதனை செய்யும்போது அதில் ஒரு பெண் குரங்கு மட்டும் அதி புத்திசாலியாக மாறுகிறது.

ஆனால் ஒரு நாள் அதன் போக்கு சரியில்லை என கொல்லப்படுகிறது. அதற்கு முன்பே அந்த பெண் சிம்பன்ஸிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதன் கண்கள் பார்க்க மனித கண்கள் போலவே இருக்கிறது. அங்கிருக்கும் ஒரு சயிண்டிஸ்ட் அதற்கு சீசர் என பெயரிடுகிறார்.

சீசர் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர அதற்கு மனிதர்களை போலவே சிந்திக்கும் திறன் வருகிறது. இந்த நிலையில் ஒரு சூழ்நிலையில் பார்க்கில் இருக்கும் மற்ற குரங்குகளோடு சேர்ந்து இருக்க வேண்டிய நிலை சீசருக்கு ஏற்படுகிறது.

அப்போதுதான் அனைத்து குரங்குகளும் நம்மை போல சிந்திக்கும் திறனோடு இருக்கவில்லை. நாம் மட்டுமே அப்படி இருக்கிறோம் என்பது சீசருக்கு தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் குரங்குகளை மனிதர்கள் அடிமை போல நடத்துவதை சீசர் வெறுக்கிறது.

சீசரின் மனமாற்றம்:

எனவே தனக்கு அறிவு வர காரணமான அந்த மருந்தை மற்ற குரங்குகளுக்கும் கொடுக்கிறது சீசர். அதன் பலனாக பார்க்கில் இருக்கும் அனைத்து குரங்குகளும் சிந்திக்கும் திறனை பெறுகின்றன.

இதனை தொடர்ந்து சீசர் அவைகளை அழைத்துக்கொண்டு நகரத்தை முற்றுக்கையிட்டு காட்டுக்குள் செல்கிறது. அந்த சமயத்தில் சீசரை வளர்த்த அந்த நபர் வந்து சீசரிடம் தன்னோடு வரும்படி அழைக்கின்றான். ஆனால் சீசர் அவனிடம் இந்த காடுதான் சீசரின் வீடு என கூறிவிடுகிறது. அதுவரை பேசாமல் இருந்த சீசர் இப்படி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனிதன் அதோடு அதை விடுகின்றான்.

இதோடு முதல் பாக கதை முடிவடைகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top