தனுஷை அசிங்கமாக திட்டிய இளையராஜா.. நின்றுப்போன படப்பிடிப்பு.. அடக்கொடுமையே?
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் தனுஷ்.
தற்சமயம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்த தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்.
இளையராஜா திரைப்படம்:
இந்த திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகனாக நடிக்கிறார் இன்னமும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ். ஆனால் இதற்கு முன்பே அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க போவதாகவும் அதில் இளையராஜாவாக நடிக்க போவதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் படத்திற்கான துவக்க விழா கூட நடந்தது அதில் இளையராஜாவும் வந்து பேசி இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளிவரவில்லை.
தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து சினிமா வட்டாரங்களில் சில பேச்சுகள் எழ துவங்கி இருக்கின்றன. அதாவது இந்த படம் நின்று போய் விட்டதாகவும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தனுஷ் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தனுஷ்க்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் அவர் பிரிந்து விட்டதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.