ஏலியன்களை தடுத்து நிறுத்திய இசைஞானி – வைராலாகும் வீடியோ


இந்தியாவில் உள்ள அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக ஓ.டி.டி தளங்கள் பலவும் இந்தியாவில் சப்ஸ்க்ரைபர்களை பெறுவதற்கான வேலைகளை பார்த்து வருகின்ற்ன. அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸ், ஜீ 5 என பல ஓடிடி தளங்களும் இதில் போட்டி போட்டு தங்களுக்கான வாடிக்கையாளர்களை பிடித்து வருகின்றன.


சமீபகாலமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தமிழ் மக்களிடையே பிரபலமாவதற்கு அதிக முயற்சிகளை செய்து வருகிறது. ஸ்குவிட் கேம், ஆல் அஸ் ஆஃப் ஆர் டெத் போன்ற வெப் சீரிஸ்களை தமிழ் மக்களிடையே பிரபலமடைய செய்ய தமிழில் உள்ள பிரபல யூ ட்யூப்பர்களை வைத்து வீடியோ தயார் செய்து வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்.


மேலும் மணி ஹையஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற சீரிஸ்களை தமிழில் டப்பிங் செய்தும் வெளியிட்டது. இந்நிலையில் நெட்ப்ளிக்ஸின் மிகவும் பிரபலமான தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரை நெட்ப்ளிக்ஸ் தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்த உள்ளது. எனவே ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸின் நான்காம் பாகமானது தமிழில் வர இருக்கிறது.


ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் கதைப்படி ஒரு கிராமத்தில் மர்மமான ஜந்துக்கள் உலா வரும். சில குழந்தைகள் சேர்ந்து அவற்றை எப்படி அழிக்கிறார்கள் என்பதாக கதை செல்லும். அதே கருவை கொண்டு அந்த ஜந்துக்கள் வருவது போலவும் அப்போது இசைஞானி இளையராஜா மியூசிக் போட்டே அவற்றை விரட்டுவது போலவும் வீடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ்
வருகிற மே 27 அன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் நான்காவது சீசன் வெளிவர இருக்கிறது.

Refresh