அந்தாளு ரொம்ப மோசமா நடந்துக்கிட்டார் – இண்டிகோ ஊழியர் மீது புகார் தெரிவித்த பூஜா ஹெக்தே..!

தென்னிந்திய சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூஜா ஹெக்தே. இவர் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களை நடித்துள்ளார். தற்சமயம் அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பூஜா ஹெக்தே, விருது விழாக்கள் போன்ற பல விழாக்கள் காரணமாக வெளி நாடுகளுக்கு, வெளியூர்களுக்கு அதிகமாக செல்வதால் விமான போக்குவரத்தையே அதிகமாக நம்பியுள்ளார். 

தற்சமயம் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமான ஊழியர் ஒருவர் தன்னிடம் மிக மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார். அவர் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்றாராம். அப்போது அங்கு பணிப்புரிந்த விபுல் நகாஷே என்னும் ஊழியர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

பொதுவாக இந்த மாதிரியான விஷயங்களை தான் டிவிட்டரில் பதிவிடுவதில்லை. ஆனால் அவர் சுத்தமாக மரியாதையே கொடுக்கவில்லை என்பதால் இதை சொல்கிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம் இந்த விஷயத்திற்காக பூஜா ஹெக்தேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh