Latest News
வலிமையை ஊற போட்டு அடிச்சீங்களே இதை கவனிச்சீங்களா.. முக்கிய விஷயத்தை பேசிய ஹெச்.வினோத்!..
H. Vinoth: தமிழ் சினிமாவில் எப்பொழுதும் முன்னணி நடிகரின் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்கள் ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால், அடுத்த படத்தின் அப்டேட் எப்பொழுது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், அவரின் படத்தை பற்றி அப்டேட் ஒன்று கிடைத்துவிட்டாலும், அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் முதல் அனைத்து இடங்களிலும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த வலிமை திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் வினோத் ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை கூறி இருக்கிறார் இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வலிமை திரைப்படம்
வலிமை திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடி திரைப்படம் ஆகும். இதில் முன்னணி நடிகரான அஜித் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை வினோத் எழுதி இயக்கிருந்தார்.
இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ஜிப்ரான் இசையமைக்கவும், யுவன் சங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இவ்வாறு பல சுவாரஸ்யமான தகவல்கள் வலிமை படத்தில் இருந்த போதும் ரசிகர்களின் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் ஒரு சாதாரண கதை களத்தை கொண்டதாகவே இருந்தது என பல கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் காவல் அதிகாரியாக அர்ஜுன் என்ற கதை பாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். சட்ட விரோதமாக நடக்கும் செயல்களை கண்காணிக்கும் அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.
ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை திரைப்படம், அஜித் ரசிகர்களால் ஓரளவு கொண்டாடப்பட்டது. மேலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இயக்குனர் வினோத் கூறிய சுவாரசிய தகவல்
வலிமை படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் வினோத், எந்த ஒரு ஹீரோவும் இது போன்ற கதைகளில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறியிருந்தார். என்கவுண்டர் போன்ற காட்சிகள் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதை சப்போர்ட் செய்கிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் ஒன்று, நான்கு இளைஞர்களை என்கவுண்டர் செய்திருப்பார்கள். ஒரு பெண்ணை ரேப் செய்ததால் அந்த இளைஞர்களை என்கவுண்டர் செய்திருப்பார்கள்.
ஆனால் ஆறு மாதம் கழித்து விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால் அது போலியான என்கவுண்டர் என்றும், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அப்பாவியான இளைஞர்கள் எனவும் தெரிய வந்தது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான போலி என்கவுண்டர்கள் உள்ளது. இன்று நீங்கள் என்கவுண்டரை சப்போர்ட் செய்தால், நாளை ரோட்டில் செல்லும் நாமும் சுட்டுக் கொல்லப்படலாம்.
இதனால் தான் படத்தின் கிளைமாக்ஸில் அஜித் குமாருக்கு மக்கள் பூக்களை தூவது போன்ற காட்சி வைத்தேன். யாருக்கு பூ போட வேண்டும் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என அந்த காட்சியை வைத்தேன். இது போன்ற நூற்றுக்கணக்கான தவல்கள் வலிமை படத்தில் இருந்தது. ஆனால் அதனை பற்றி பேசுவதற்கோ, கவனிக்கவோ யாரும் தயாராக இல்லை என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது என இயக்குனர் வினோத் தெரிவித்திருந்தார்.