Bigg Boss Tamil
மக்கள் கை தட்டுறதாலதான் பிரதீப் இந்த ஆட்டம் போடுறாரு… வெளிப்படையாக கூறிய வினுஷா!..
biggboss tamil season 7 : வாடா வருடம் நூறு நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்சமயம் துவங்கி சென்று கொண்டுள்ளது. முன்பை விட இந்த சீசன் மோசமாக இருப்பதாக நிறைய இடங்களில் பேச்சுக்கள் இருக்கின்றன.
முன்பெல்லாம் விதிமுறைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவில் விதிமுறைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பாப்புலராக இருப்பவர்கள் ஜெயித்து விடலாம் என்கிற காரணத்தினால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர். இந்த நிலையில் போன வாரம் சீரியல் நடிகை வினுஷா எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்சமயம் பேட்டியில் அவர் பேசும்பொழுது பிக் பாஸ் வீட்டில் சிலர் காலையில் எழுந்திருக்கும் பொழுதே நமக்கு தினசரி சம்பளம் தருகிறார்கள் மக்கள் மத்தியில் நம் பிரபலமாக வேண்டும் எனவே இன்றைக்கு யாரையாவது நாம் வம்பு இழுக்க வேண்டும் என்று எழுந்திருக்கிறார்கள்.
இது ஒரு ஆரோக்கியமான போட்டி அல்ல. முக்கியமாக மாயா பிரதீப் போன்றவர்கள் தினசரி இதை ஒரு வேலையாக வைத்திருக்கின்றனர் இதனால் அது அந்த போட்டியில் விளையாடும் மற்றவர்களுக்கு நிம்மதியே இல்லாமல் போகிறது.
அவர்கள் பிரயோகிக்கும் உருவக்கேலி தொடர்பான சில வார்த்தைகள் மோசமானதாக இருப்பதால் நான் அவற்றை தவிர்க்குமாறு கூறினேன். ஏனெனில் அவை மக்கள் மத்தியில் தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் அதையெல்லாம் தவிர்ப்பதாக தெரியவில்லை.
அதிலும் பிரதீப் மக்களின் செல்வாக்கு தனக்குதான் இருக்கிறது என ரொம்ப ஆட்டம் போடுகிறார் என்று கூறிய வினுஷா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.