தளபதி 67ல் நான் வில்லன் இல்ல.. நிவின் பாலி மறுப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் நிவின் பாலி அதை மறுத்துள்ளாராம்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதற்கு பின் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் இணையும் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

லோகேஷ் – விஜய் கூட்டணிக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய் 50 வயதான நபராக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐந்தாவது வில்லனாக மலையாள நடிகர் ப்ரித்விராஜிடம் பேசியதாகவும், ஆனால் அவர் மறுத்ததால் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என நிவின் பாலி தரப்பில் கூறியுள்ளார்களாம்.

Refresh