வடிவேலுவால்தான் அந்த படத்தில் நடிச்சேன்!.. விஜய் பட நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த வடிவேலு!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது காமெடிகள் வெற்றி பெற்றுவிடும். சில படங்களில் அந்த படங்களே ஓடாவிட்டாலும் கூட படத்தின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

இப்படி நாம் சில வடிவேலு காமெடிகளை பார்க்கும் பொழுது அது எந்த படம் என்று நமக்கு தெரியாது ஆனால் காமெடி மட்டும் நமக்கு தெரிந்ததாக இருக்கும். அதுதான் வடிவேலு காமெடிக்கு இருக்கும் சிறப்பு. வடிவேலு எப்போதுமே அவருடன் ஒரு கூட்டத்தை வைத்திருப்பார்.

அவர்களுக்கு எப்போதும் வடிவேலு தன் படங்களில் வாய்ப்பு கொடுப்பார் அப்படியாக ஐயா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தில் ஒரு குரங்காட்டி வரும் காட்சி இருந்தது. அந்த காட்சியை எடுக்க இரண்டு மூன்று நபர்களை நடிக்க வைத்தனர். ஆனால் காட்சிகள் சரியாக வரவில்லை.

எனவே யாரை நடிக்க வைக்கலாம் என வடிவேலுவிடம் கேட்ட பொழுது அவர் பெஞ்சமினை நடிக்க வைக்கலாம் என கூறினார். பெஞ்சமின் வேற யாரும் அல்ல திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பராக வருபவர்தான் நடிகர் பெஞ்சமின்.

அவருக்கு போன் செய்து அவரை பொள்ளாச்சிக்கு வர செய்தார் வடிவேலு வந்தவுடன் அவருக்கு மேக்கப் செய்து பார்த்த பொழுது பார்க்க குரங்காட்டியை போலவே இருந்தார் பெஞ்சமின். ஆனால் படக்குழுவில் உள்ள நபர்கள் அவரை நடிக்க ஒப்புக்கொள்ளாத போது வடிவேலு அவர் நடித்தே ஆக வேண்டும் என்று அவருக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்த நிகழ்வை நெஞ்சமின் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.