மும்பையில் படப்பிடிப்பு முடிந்தது!.. ராக்கெட் வேகத்தில் போகும் தலைவர் 170.. பொங்கலுக்கு ரிலிஸோ!..

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்த நடித்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் வெகு நாட்களை எடுத்துக்கொண்டார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக தயாரான ஜெயிலர் இந்த வருடம்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்க கம்மிட்டான திரைப்படம் தலைவர் 170. இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

ஞானவேல் இயக்குகிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் துவங்கப்பட்டது. வெகுவேகமாக கேரளாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்து மும்பையில் தொடங்கியது.

இப்போதுதான் இரண்டு வாரத்திற்கு முன்பு மும்பையில் துவங்கிய படப்பிடிப்பு அதற்குள் முடிந்தே விட்டது. அதை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எனவே இன்னும் கொஞ்ச அளவில்தான் படப்பிடிப்பு இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

அதுவும் கேரளா மற்றும் சென்னையில் தான் இருப்பதாக கூறப்படுகிறது எனவே அந்த படப்பிடிப்புகளும் வெகு சீக்கிரமாகவே முடிந்துவிடும் என கூறப்படுகிறது. எனவே சீக்கிரமாகவே தலைவர் 170 திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னமும் படத்தின் பெயரை கூறாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்திற்கு அது ஒரு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது