Actress
பாடகியா? நடிகையானு டவுட்டா இருக்கு! – ஜொனிட்டா காந்தியின் புது புகைப்படங்கள்!
சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையானவர்கள் உண்டு. அழகாக கதாநாயகி ஆவதற்கான அம்சத்துடன் இருக்கும் பாடகிகள், மாடல்கள் நடிகை ஆவதுண்டு.

தமிழில் பல வருடங்களாக திரைப்படங்களில் பாடி வருவர் ஜொனிட்டா காந்தி. இவர் பாடகி என்றாலும் கூட சினிமா ரசிகர்களில் ஜொனிட்டா காந்திக்கும் ரசிகர்கள் உண்டு.

மாஸ்டர் படத்தில் அலபிப்போ ஹபிபோ பாடலை ஜொனிட்டா காந்திக்காக பார்த்த ரசிக பட்டாளமும் உண்டு.
இவர் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார். அந்த படத்தில் எஸ்.பி.பி பாடிய சென்னை எக்ஸ்ப்ரஸ் என்னும் டைட்டில் பாடலை பாடியிருந்தார்.

அதை தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்புகளை பெற்றார் ஜொனிட்டா. தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கு பாடல் பாடி வந்த ஜொனிட்டா 2018 ஆம் ஆண்டு தமிழில் சர்க்கார் படத்தில் பாடியிருந்தார்.

அதை தொடர்ந்து தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்சமயம அவரது புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

