அஜித் படத்துக்கு அப்புறம் நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்னு சொல்றாங்க!.. அது உண்மையில்லை!. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Actor ajith: இளமை காலங்களிலும் சரி இப்போதும் சரி தனக்கேன மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித். திருப்பூரில் சாதாரண கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு திடீரென கிடைத்ததுதான் இந்த சினிமா வாய்ப்பு.

அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். அஜித்திற்கு வெற்றிகளை அள்ளிக்கொடுத்த பல திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் உண்டு. அப்படியான அவரது திரைப்படங்களில் காதல் மன்னன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும்.

ajith2

இயக்குனர் சரணுக்கு முதல் திரைப்படம் காதல் மன்னன். இந்த படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது மட்டுமில்லாமல் அந்த படத்தின் கதாநாயகிக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கியது. மன்னு என்கிற கதாநாயகி முதன் முதலாக காதல் மன்னன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

திரைப்படம் கொடுத்த வெற்றி:

திலோத்தமா என்னும் அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தப்போதும் கூட அவர் அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் பேட்டியில் கூறும்போது எதற்காக இந்த சினிமா வாழ்க்கையை தியாகம் செய்தீர்கள் என அவரிடம் கேட்கும்போது நான் எதையும் தியாகம் செய்யவில்லை. சொல்லப்போனால் எனக்கு நடிப்பின் மீது ஈடுபாடு கிடையாது.

நான் ஒரு க்ளாச்சிக்கல் டான்ஸர் எனக்கு அதன் மீதுதான் ஈடுபாடு அதிகமாக இருந்தது. எனவே உலகம் முழுக்கவும் சுற்ற வேண்டும் என்பதும் எனது ஆசையாக இருந்தது. கதாநாயகியாக நடித்தால் அதையெல்லாம் செய்ய முடியாது என்றுதான் அதை நிராகரித்தேன்.

மற்றப்படி எனது வாழ்க்கையை நான் சிறப்பாக வாழ்ந்துள்ளேன். இதில் எதையுமே நான் இழக்கவில்லை என கூறுகிறார் மன்னு!.