
கேரளாவை பொருத்தவரை மலையாள சினிமாவை போலவே அங்கு தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் ஆதரவு உண்டு. மலையாள சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா மீதும் ஈடுபாடு கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

மேலும் தென்னிந்திய சினிமாவில், தமிழ் சினிமா துறை முக்கியமான துறையாக உள்ளது.
மலையாள சினிமாவில் தளபதி விஜய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் கேரளாவில் உண்டு. எப்போதும் தளபதி படம் ஒரு குறிப்பிட்ட வசூலை மலையாளத்தில் கொடுக்கும். மற்ற தமிழ் நடிகர்கள் திரைப்படங்கள் எதுவும் அந்த அளவு மலையாளத்தில் ஓடுவதில்லை.

இந்த நிலையில் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வெளியான முதல் நாளே கேரளாவில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதுவரை தளபதி படமே இந்த அளவிலான வசூலை அளித்தது இல்லையாம். வெகுநாட்களுக்கு பிறகு சினிமாவிற்கு வந்து இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கிறார் உலக நாயகன் என ரசிக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.