2 கோடியையும் ஊழியர்களுக்கு பிரிச்சு கொடுங்க? – பெருந்தன்மையுடன் கமல் செய்த காரியம்.

கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த தமிழின் மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியை கமல் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடினார்.

படம் அதிக ஹிட் கொடுத்ததுமே கமல் படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கார் வாங்கி பரிசளித்தார். அதே போல படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கொரு பல்சர் பைக் வாங்கி கொடுத்தார்.

படத்தின் வெற்றியால் தான் மட்டுமின்றி அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என கமல் இதை செய்தார். நடிகர் சூர்யாவிற்கு வாட்ச் வாங்கி பரிசளித்தார். அதன் பிறகு படக்குழுவை ஒரு நாள் அழைத்து அனைவருக்கும் விருந்து வைத்தார். ஏனெனில் கமல் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை கொடுத்த படம் விக்ரம் மட்டுமே.

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது. வெகு நாட்கள் ஆகியும் விக்ரம் படம் சில தியேட்டர்களில் ஓடி கொண்டிருந்தது. அதன் மூலம் ஒரு 2.5 கோடி ரூபாய் படத்திற்கு லாபம்  வந்தது. அதை கணக்கு பார்த்து சிறிது நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனிடம் வழங்கியது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

அதை கமல்ஹாசன் அவரது ஊழியர்கள் மற்றும் படத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டாராம்.

Refresh