Connect with us

அதிக நாட்கள் ஓடிய உலகநாயகன் திரைப்படம் – வைரலாகும் புகைப்படம்

News

அதிக நாட்கள் ஓடிய உலகநாயகன் திரைப்படம் – வைரலாகும் புகைப்படம்

Social Media Bar


தமிழ் திரையுலகில் டாப் லெவல் நட்சத்திரங்களில் ஒருவர் கமலஹாசன். சிறுவயது முதலே சினிமாவில் இருந்து வரும் இவர் பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்


சில வருடங்கள் இடைவெளிக்கு பிற்கு தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் விக்ரம் திரைப்படமானது திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என முக்கிய நடிகர்கள் நடித்திருப்பதால் படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.


இந்நிலையில் கமல் இதற்கு முன்பு நடித்த படங்களில் எது அதிக நாட்கள் திரையில் ஓடியது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. 1978 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான மரோ சரித்ரா என்கிற திரைப்படமே அவரது படத்தில் அதிக நாட்கள் திரையில் ஓடிய திரைப்படமாக கூறப்படுகிறது. கே. பாலச்சந்தர் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி 500 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியிருக்கிறது.


இதன் 500 ஆவது நாள் போஸ்டர் தற்சமயம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Bigg Boss Update

To Top