Friday, July 17, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sivaji ganesan kamal

sivaji ganesan kamal

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

by Raj
September 30, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே இலக்கணம் வகுத்தவர் என பலராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் தான் கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கும் பெரிய வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பல விதமான கதாப்பாத்திரங்களில், கதையமைப்புகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உலக நாயகன் முத்திரையை பதித்துக் கொண்டார்.

சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவர் மகன் படத்தின் போதே கமல்ஹாசனுக்கும், சிவாஜி கணேசனுக்கும் இடையே சிறிய நடிப்பு சண்டை நிகழ்ந்துள்ளது.

அப்போது சிவாஜி பழம் நடிகர் என்பதால் ஒரு காட்சியை அவரிடம் விவரித்து விட்டால் அதை அவரே புரிந்து உணர்ந்து சிறப்பாக நடித்து விடுவார். அதை தாண்டி யாரும் அவரிடம் அடிக்கடி ரீடேக் கேட்பதோ அல்லது இப்படி மாற்றி நடிக்கலாம் என்று பரிந்துரை செய்வதோ செய்ய மாட்டார்கள்.

தேவர் மகன் படத்தை இயக்கியவர் பரதன். அந்த படப்பிடிப்பில் ஒரு காட்சியில் சிவாஜியின் நடிப்பு கமல்ஹாசனுக்கு சரியாக வரவில்லை என தோன்றியுள்ளது. அதை பரதனிடம் தயக்கத்துடன் கூறிய கமல்ஹாசன் “சிவாஜி சாரிடம் சொல்லி மறுபடி வேறுமாதிரி செய்ய சொல்லலாமா?” என கேட்டுள்ளார்.

ஆனால் அப்போதெல்லாம் சிவாஜியிடம் கரெக்‌ஷன் சொல்லவே பலரும் தயங்குவதை போல பரதனும் தயங்கியுள்ளார். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிவாஜி “என்ன டேக் ஓகேதான?” என்று கேட்டுள்ளார். அதற்கு பரதனை முந்திக் கொண்டு கமல்ஹாசன் “ஓகே இல்லைங்கய்யா” என்று கூறியுள்ளார்.

பிறகு “இந்த காட்சியில் பெரியத்தேவர் கேரக்டர் வரணும் சார்.. ஆனா கேரக்டர் கொஞ்சம் சின்ன தேவரா இருக்கு” என நடிப்பு குறைவாக உள்ளதை ஜாடையாக சொல்லியுள்ளார் கமல்ஹாசன். அதற்கு சிவாஜி கணேசன் முறைத்துக் கொண்டே “பெரிய தேவர்தான.. வருவாரு.. வருவாரு” என சொல்லிவிட்டு மீண்டும் அந்த காட்சியை சரியாக நடித்து கொடுத்தாராம்.

கோபமாக பேசினாலும் திரைப்படம் என்று வரும்போது திட்டிக் கொண்டே கூட சில காட்சிகளை அழகாக கேட்டதை விட சிறப்பாக செய்து தருவார் சிவாஜி என கமல்ஹாசன் அவர் குறித்த நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tags: devar magankamalhaasansivaji ganesanகமல்ஹாசன்சிவாஜி கணேசன்தேவர் மகன்
Previous Post

அந்த முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடையிலேயே உஷ்ணத்தை ஏத்தும் யாஷிகா!.

Next Post

பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
bigg boss season 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved