கமல், மணி சாருக்கு சம்பளம் நஹி? உதயநிதி வெச்ச ட்விஸ்ட்!

தமிழில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். ரோஜா, பம்பாய், உயிரே என தேசிய அளவில் புகழ்பெற்ற படங்களை இயக்கிய மணிரத்னம் 1986ல் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய படம் ‘நாயகன்’. இந்த படம் தற்போது க்ளாசிக் சினிமாவாக கொண்டாடப்பட்டாலும் வெளியான சமயத்தில் வரவேற்பை பெறவில்லை.

அதற்குபின் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியும் அமையவில்லை. சுமார் 35 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி திரும்ப வருகிறது. கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இணைந்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூன்று நிறுவனங்கள் சேர்ந்து இந்த படத்தை தயாரிப்பதாகவும் 2024ம் ஆண்டில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கும், மணிரத்னத்திற்கும் சம்பளம் கிடையாதாம். படத்தயாரிப்பில் பங்குதாரராக இவர்கள் இணைந்துள்ளதாகவும், சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் பங்கு பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் ப்ளானே திடீரென முடிவானதுதானாம். அதனால் இன்னமும் ஒப்பந்த விவரங்கள் வெளியாகவில்லையாம்.

Refresh