Connect with us

திருட்டு விசிடி போட்டவனை கூட வச்சிருக்கார் உதயநிதி ஸ்டாலின்!.. பகிரங்கமாக கூறும் பிரபலம்!.. இது என்ன புது கதையால இருக்கு!..

udhayanithi stalin

Latest News

திருட்டு விசிடி போட்டவனை கூட வச்சிருக்கார் உதயநிதி ஸ்டாலின்!.. பகிரங்கமாக கூறும் பிரபலம்!.. இது என்ன புது கதையால இருக்கு!..

Social Media Bar

கலைஞர் மு கருணாநிதியின் குடும்பம் வெகு காலமாக சின்னத்திரை மட்டும் வெள்ளி திரையில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்ததே. ஏனெனில் கருணாநிதி முதன் முதலாக சினிமாவின் வழியாகதான் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அவருக்கு எப்போதுமே தமிழ் சினிமாவோடு தொடர்பு இருந்துதான் வந்தது. ஆனால் அவரது மகனான ஸ்டாலின் சினிமாவின் மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா மீது கவனம் செலுத்தி வருகிறார்.

நிறைய திரைப்படங்களை தயாரித்து வந்த உதயநிதி பிறகு சில காலங்கள் சினிமாவில் கதாநாயகனாக நடித்தார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு அது உதவும் என்பதால் அப்படி செய்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் திரைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் உதயநிதி.

udhayanithi-stalin
udhayanithi-stalin

தற்சமயம் அரசியலுக்கு சென்றதால் படங்கள் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் உதயநிதி. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபல பேச்சளாரான பாரி சாலன் உதயநிதி மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

தற்சமயம் ஜாபர் சாதிக் மீது போதை கடத்தல் குற்றச்சாட்டு ஒன்று போய் கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஜாபர் சாதிக் அரசாங்கத்துக்கு விரோதமாக பல வேலைகளை செய்து வந்தார். அதில் திருட்டு விசிடி விற்பனை செய்வதும் ஒரு வேலையாக இருந்தது.

சரத்குமார் நடித்த ஜக்குபாய் என்கிற திரைப்படம் திரைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பே திருட்டு விசிடியாக வெளியானது. அதனால் அந்த திரைப்படமே வெளியாகாமல் போனது. அதை செய்ததே இந்த ஜாபர் சாதிக்தான். இதனால் அவருக்கு சிறை தண்டனையும் கிடைத்தது,

சாமானிய மக்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உதயநிதிக்கு தெரியாமல் இருக்குமா. அப்படி இருந்தும் அவர் ஜாபர் சாதிக்கோடு எப்படி பழக்கத்தில் இருந்தார் என கேள்வி எழுப்புகிறார் பாரி சாலன்.

Source – Link

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top