கமல், மணிசார் படத்துக்கும் ரஜினி, நெல்சன் படத்துக்கும் இதுதான் வித்தியாசம்.. நடிகர் பக்ஸ் ஓப்பன் டாக்..!
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பக்ஸ் அதற்கு பிறகு நடிகர் பக்ஸுக்கு நிறைய திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன ஆனால் இப்பொழுது தக்லைஃப் திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடிக்க கிடைத்தது.
தக் லைப் திரைப்படத்தில் கமலுடன் இருக்கும் முக்கியமான ஆட்களில் நடிகர் பக்ஸும் ஒருவராக இருந்துள்ளார். அதேபோல தற்சமயம் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து அவரிடம் கேட்டபொழுது மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் படத்தில் நடிக்கும் பொழுது அதில் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.
தினசரி ஏதோ ஒன்றை நாம் கற்றுக் கொண்டே இருப்போம் ஆனால் ரஜினிகாந்த் நெல்சன் திரைப்படத்தை பொருத்தவரை அது ஒரு மேஜிக் என்று தான் கூற வேண்டும் அங்கே நமக்கு கிடைக்கும் விஷயங்கள் எல்லாம் எதையும் நாம் விவரிக்க முடியாது ஆனால் அது நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் பக்ஸ்.