நாயகன் மாதிரி ஒரு படம்.. தக் லைஃப் படத்தின் கதை இதுதான்.!

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இணைந்து மீண்டும் உருவாகும் திரைப்படமாக தக் லைஃப் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாயகன் திரைப்படத்தில் வருவது போலவே இந்த படத்திலும் மாபியா கேங்ஸ்டர் கூட்டத்தின் தலைவராக ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் என்கிற கமலின் கதாபாத்திரம் இருக்கிறது.

அவரின் சகோதரராக மாணிக்கம் என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் இருவரையும் போலீஸ் என்கவுண்டர் செய்ய இருக்கும் நிலையில் அமரன் எனப்படும் சிறுவன் (சிம்பு) அவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார். அதிலிருந்து அமரனை தனது சொந்த மகனாக வளர்க்கிறார் ரங்கராய சக்திவேல் நாயக்கர்.

thug-life
thug-life
Social Media Bar

அமரன் இளைஞனாக வளர்ந்த பிறகு பாதி பொறுப்புகள் அவரது கைக்கு வருகிறது. ஆனாலும் கூட அந்த கேங்கின் தலைவனான சக்திவேல் நாயக்கருக்கு கிடைக்கும் எந்த ஒரு மதிப்பும் அமரனுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சக்திவேல் நாயக்கரை கொலை செய்வதற்கு திட்டமிடுகிறான் அமரன். ஆனால் அதிலிருந்து தப்பிக்கும் சக்திவேல் திரும்ப அமரனை பழிவாங்க வருகிறான்.

படத்தின் இறுதியில் கமல்ஹாசனே சிம்புவை கொன்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. அதிகாரத்தை யார் கைப்பற்ற போகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.