News
விக்ரம் ஆரம்பம்தான்.. லோகேஷ் ப்ளானே வேற? – லீக் செய்த கமல்ஹாசன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா முக்கியமான ஒரு ரோலில் சில நிமிட காட்சிகளில் தோன்றியுள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ளது. இன்று இந்தியிலும் விக்ரம் பட ட்ரெய்லர் வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ளது.

தற்போது கமல்ஹாசன் பிரான்சில் நடந்து வரும் கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்குள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் “விக்ரம் படத்தின் கடைசி சில நிமிடங்களில் வியக்கத்தக்க ஒரு கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். 3 பாகமாக எடுக்கும் அளவிற்கு அந்த காட்சிக்குள் ஒரு குட்டிக்கதை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் விக்ரம் வெறும் ஆரம்பமாக இருக்கலாம் என்றும், லோகேஷ் கனகராஜ் தனது மற்ற பட கதாப்பாத்திரங்களையும் இணைத்து மார்வெல் போல புதிய யுனிவெர்ஸை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
