Latest News
காந்தாரா படத்தின் அந்த ’சீன்’ கட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சமீபத்தில் வெளியான காந்தாரா படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதில் ஒரு காட்சியை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் ‘காந்தாரா’. கடந்த சில வாரங்கள் முன்னதாக கன்னட மொழியில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பிலும் பெரும் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. பலரும் பாராட்டி வரும் இந்த படத்தில் இடம்பெறும் ’வராக ரூபம்’ என்ற பாடல் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான ‘தாய்குடம் ப்ரிட்ஜ்’ பாடிய பாடலை வராக ரூபம் என்ற பெயரில் அவர்களது அனுமதி இல்லாமலே காந்தாரா படத்தில் பயன்படுத்தியுள்ளதாக அந்த இசை குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காந்தாரா திரைப்படத்தில் இடம்பெறும் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ர்ரீமிங் தளங்களில் ஒலிபரப்ப தடை விதித்துள்ளது. இதனால் திரையரங்குகளில் காந்தாரா படத்திலிருந்து அந்த பாடல் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம். ஓடிடியிலும் அந்த காட்சிகள் வெளியாகாது என கூறப்படுகிறது.