உங்க ஊர்ல எங்க படத்தை ஓட்டுவோம்..! – தமிழில் மாஸ் ஓப்பனிங் ப்ளானில் “காந்தாரா”!

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள காந்தாரா படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கன்னடத்தில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள படம் காந்தாரா. இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார் கன்னட இயக்குனர் ரக்‌ஷித் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் வெளியான அதேசமயம் பொன்னியின் செல்வனும் கன்னடத்தில் வெளியானது.

அப்போது சொந்த மொழி படமான காந்தாராவுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என கன்னட திரையுலகில் கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் கன்னடத்தில் வெளியாகி வெற்றுப்பெற்றுள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது காந்தாரா.

தமிழில் கேஜிஎஃப் 2 படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் வெளியிடுகின்றனர். தமிழின் பொன்னியின் செல்வன் கன்னடத்தில் வரவேற்பை பெற்ற நிலையில், கன்னடத்தின் காந்தாரா தமிழில் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர்.

கேஜிஎஃப் அளவிற்கு இந்த படத்திற்கும் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளாராம் ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு. இந்த படத்தை வரும் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh