படம் பார்க்க எட்டு மைல் சைக்கிள்ளேயே போவேன்! –  பாலச்சந்தரின் பால்ய நினைவுகள்!

தமிழ் சினிமாவில் புகழ்வாய்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். காலம் காலமாக சினிமாவில் ஆண்களை முக்கிய நட்சத்திரங்களாக வைத்து திரைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தபோது அதை மாற்றி பெண்களை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைப்படம் எடுத்தவர் பாலசந்தர்.

இவர் ஒரு பேட்டியில் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துக்கொள்கிறார். பாலசந்தர் திருவாரூரில் உள்ள நன்னிலத்தில் பிறந்தவர். அவருடைய 8 வயது முதலே திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டார். ஆனால் அவர்கள் வீட்டில் திரைப்படம் பார்ப்பதற்கு எதிராக இருந்துள்ளனர்.

மேலும் நன்னிலத்தில் திரையரங்குகளும் கிடையாது. அப்போது திரைப்படம் பார்க்க வேண்டும் எனில் திருவாரூர் சென்றால்தான் பார்க்க முடியும். நன்னிலத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருந்தது திருவாரூர். எனவே படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் திருவாரூர் தான் செல்ல வேண்டும்.

90ஸ் காலம் வரை வாடகை சைக்கிள் என்கிற முறை இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என காசு கொடுத்து வாடகை சைக்கிள் எடுத்துக்கொள்ளலாம். பாலச்சந்தரும் அதே போல வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு திருவாரூர் போய் படங்கள், நாடகங்களை பார்த்துள்ளார்.

அவரது திரை வாழ்க்கைக்கு இந்த அனுபவங்களே காரணமாக அமைந்ததாக கூறுகிறார்.