Tag Archives: பாலச்சந்தர்

பாலச்சந்தர் இல்லாத குறையை தீர்த்த ரஜினிகாந்த்.. கமலுக்கும் ரஜினிக்கும் இப்படி ஒரு கமிட்மெண்ட் இருக்கா?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இன்னமும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.

கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் என்றால் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை கூறலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன். தற்சமயம் தேர்தலில் நிற்கப்போவது குறித்து அவர் ரஜினிகாந்திடம் பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

முன்பெல்லாம் இந்த மாதிரியான முக்கியமான விஷயங்கள் நடக்கும் பொழுது நடிகர் கமல்ஹாசன் இதற்காக இயக்குனர் பாலச்சந்தரை நேரில் சென்று சந்திப்பாராம்.

பிறகு பாலச்சந்தரிடம் இதுக்குறித்து ஆலோசனை செய்வாராம் ஆனால் இப்பொழுது பாலச்சந்தர் இல்லாத நிலையில் ரஜினிகாந்திடம் தான் எந்த முக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் சென்று பேசி வருகிறாராம் கமல்ஹாசன்.

எனவே இப்பொழுது பாலச்சந்தர் இல்லாத குறையை ரஜினிகாந்துதான் தீர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது மேலும் இத்தனை வருட போட்டிக்குப் பிறகும் இன்னமும் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

அந்த விஷயத்துல அம்மா ரொம்ப மோசம்.. விஜயகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்!..

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தியதில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர்கள் இருவருமே நிறைய நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்தியும் இருக்கின்றனர்.

நடிகை ரேவதி சுகன்யா மாதிரியான நிறைய நடிகைகள் இவர்கள் இருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அப்படியாக புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ருத்ரா.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார் ருத்ரா. அதில் அவருக்கு அதிக பிரபலத்தை பெற்று கொடுத்தது விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படம்.

2007 ஆம் ஆண்டு ஓரம் போ என்கிற திரைப்படத்தில் நடித்தார் ருத்ரா. அதற்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டேன். அதனால் எனக்கு 20 வயது ஆகும் வரையில் கூட எல்லா படப்பிடிப்புக்கும் எனது அம்மாவும் கூட வருவார். எப்போதுமே பாதுகாப்பாக என்னை பார்த்துக் கொள்வார்.

அதே சமயம் நான் நடிப்பது நன்றாக இருக்கா?  இல்லையா? என்று வெளிப்படையாகவே கூறிவிடுவார். ஒருவேளை நான் நடிப்பது நன்றாக இல்லை என்றால் என்னை திட்டுவார். அதனால் எனது அம்மாவின் மூலமாகதான் மிக நன்றாக நடிக்க கத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ருத்ரா.

லோகேஷ் கனகராஜை பார்த்தால் பாலச்சந்தர் அதிர்ச்சியாகிடுவார் போல.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன புது விஷயம்.!

சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனர்களின் சம்பளம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது முத்து திரைப்படத்தை இயக்கும் பொழுது எனது சம்பளம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது.

அதற்கு முன்பு வரை நான் 12 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தேன். முத்து திரைப்படத்தின் போது ரஜினி சார் என்னிடம் என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். நான் 12 லட்சம் என்று கூறினேன்.

உடனே எனக்கு 15 லட்சம் சம்பளம் எழுதி கொடுத்து அதை பாலச்சந்தர் சாரிடம் கொடுங்கள் அவர்களுக்கு இந்த சம்பளத்தை கொடுப்பார் என்று கூறினார். நானும் சரி என்று பாலச்சந்தரிடம் அதைக் கொடுத்தேன்.

இயக்குனர் பாலச்சந்தர்:

அதை பார்த்து பாலச்சந்தர் அதிர்ச்சி அடைந்து விட்டார். என்னய்யா அதுக்குள்ள 15 லட்ச ரூபாய் சம்பளம் கேட்கிற? எத்தனாவது படம் இது உனக்கு என்று என்னிடம் கேட்டார்.

நான் இது 13 வது படம் என்று கூறினேன் 13 வது படத்திற்கே 15 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாயா? நான் இதுவரை எக்கச்சக்கமாக படம் எடுத்து விட்டேன். ஆனால் மொத்தமாக 5 லட்ச ரூபாய் கூட நான் சம்பளமாக வாங்கியது கிடையாது என்று அதிர்ச்சியாக கூறினார் பாலச்சந்தர் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஐந்தாவது திரைப்படத்திற்கு 30 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியதாக ஒரு பேச்சு உண்டு. லோகேஷ் கனகராஜை எல்லாம் இப்பொழுது பாலச்சந்தர் இருந்து பார்த்தார் என்றால் அதிர்ச்சியடைந்து விடுவாரோ என்று இது குறித்து பேசி வருகின்றனர்.

நம்ப வைத்து ஏமாற்றிய கே.பாலச்சந்தர்.. வருத்தத்தில் நடிகர் எடுத்த முடிவு.. இப்படியா பழி வாங்குறது?.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பெரும் நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் தொடர்ந்து பிறகு பட வாய்ப்புகளை பெற்ற ஸ்ரீகாந்த் சினிமாவை விட்டு விலகினார். அதற்கு பிறகும் நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகும் அவ்வளவாக அவருக்கு வரவேற்பு பெற்று தரவில்லை.

இப்பொழுது பேட்டிகளில் பேசிய ஸ்ரீ காந்த் இதுக்குறித்து கூறும் பொழுதே நண்பன் திரைப்படத்தில் நடித்த பிறகு கூட ஏன் மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை. மக்களின் மனதை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நண்பன் பட வெற்றி:

நண்பனின் வெற்றிக்கு பிறகு எனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசி இருந்தார் ஸ்ரீகாந்த்.

எங்களுக்குள் ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் வெளியில் சொல்வதில்லை என்று கூறிய ஸ்ரீகாந்த், கே பாலச்சந்தர் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று கே.பாலச்சந்தரிடம் நான் சென்ற பொழுது அவர் இயக்கி வந்த சீரியலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதில் நடித்து வந்தேன்.

ஸ்ரீகாந்தின் கோரிக்கை:

அதற்கு பிறகு எனக்கு அந்த சீரியலில் நடிக்க பிடிக்கவில்லை எனவே நான் வெளிநாட்டுக்கு போறேன். எனக்கு பிரேம் அடித்து விடுங்கள் என்று பாலச்சந்தரிடம் கூறினேன்.

பிரேம் அடித்து விடுங்கள் என்று கூறினால் அந்த நாடகத்தில் இறந்து விட்டதாக அந்த கதாபாத்திரத்தை முடித்து விடுவார்கள். முதலில் இதற்கு பாலச்சந்தர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் வெளிநாட்டுக்கு செல்கிறேன் என்பதால் சரி சினிமாவை விட்டு வேற ஏதாவது நல்ல தொழிலுக்கு போ என்று கூறி என்னை அனுப்பி வைத்தார்.

ஆனால் அதற்குப் பிறகும் நான் திரைப்படங்களில்தான் நடித்தேன். இதனால் பாலச்சந்தருக்கு என் மீது கோபம் இருந்தது. அதற்கு பிறகு நான் நடிக்கும் ஒரு திரைப்படத்தை கே பாலசந்தரின் கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

நான் பாலச்சந்தர் என்னுடைய திரைப்படத்தை தயாரிப்பதை ஒப்புக்கொள்ளவில்லை ஏனெனில் நாடகத்தில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு ஒன்றரை வருடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கூறி என்னை ஏமாற்றி வந்தார் பாலச்சந்தர் அதனால் அவருடைய படத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

நான் சாகுற வரைக்கும் என் படத்துல அதை மட்டும் நடக்க விட மாட்டேன்!.. பாலச்சந்தரிடம் மறுத்து பேசிய ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் கூட இன்னமும் அவர் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

இந்த திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு பிறகு வரவிருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

rajinikanth

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அவர் சந்தித்த பிரச்சனைகள் நிறைய இருந்தன. அதில் முக்கியமான பிரச்சனை என்றால் அது அவரது உச்சரிப்புதான். இப்போது வரையிலுமே ரஜினிகாந்திற்கு தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சீராக இருக்காது.

மறுத்த ரஜினிகாந்த்:

சினிமாவில் அறிமுகமானப்போது அவருக்கு அது ஒரு பிரச்சனையாக இருந்தது. ஒரு நடிகனுக்கு உச்சரிப்பு ரொம்ப முக்கியம். எனவே சீக்கிரம் தமிழில் நன்றாக பேச கற்றுக்கொள் என பாலச்சந்தர் கூறியிருந்தார். இருந்தாலும் ரஜினிக்கு உச்சரிப்பு சரியாக வராததால் அவருக்கு டப்பிங் வேறொரு ஆள் செய்தால் சரியாக இருக்கும் என பாலச்சந்தர் நினைத்தார்.

ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை என் படங்களுக்கு நான் தான் டப்பிங் பேசுவேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ரஜினி. அதன் பிறகு ரஜினியின் நடிப்புக்கு முன்னால் அவரது உச்சரிப்பு யாருக்கும் உறுத்தலாக இல்லை. எனவே மக்களே பிறகு அதை கண்டுக்கொள்ளாமல் விட்டனர்.

என் தன்மானத்துல கைய வச்சார் பாலச்சந்தர்!.. அடுத்து வாலி செஞ்சதுதான் சம்பவம்!..

Balachandar and Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகுவாக பாராட்டப்பட்ட ஒரு கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே அவருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறங்கி அவருக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்தவர் கவிஞர் வாலி.

அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி விஜய் அஜித் கால கட்டம் வரை தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தார் வாலி. இதற்கு நடுவே சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார்.

ஹேராம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனின் தந்தையாக நடித்திருப்பார் வாலி. இந்த நிலையில் வாலியை நடிப்பின் பக்கம் இழுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தரின் ஒரு திரைப்படத்தை இயக்கும் போது அந்த திரைப்படத்தில் வாலிக்கு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

எனவே வாலியை அழைத்து அன்றைய படபிடிப்பை துவங்கினார் படப்பிடிப்பு துவங்கிய உடனே வாலிக்கு நடிக்க வரவில்லை கேமராவை பார்த்தவுடனே ஒரு பதற்றம் அவருக்கு வந்துவிட்டது. இதனை அடுத்து இரண்டு மணி நேரம் நடித்தும் அதில் வாலியின் நடிப்பு சரியாக வரவில்லை.

பிறகு பாலச்சந்தரை அழைத்த வாலி எனக்கு நடிப்பு வராது என்று நினைக்கிறேன். நான் பாடல் வரிகள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன் வேறு யாரையாவது வைத்து படபிடிப்பை நடத்திக் கொள் என்று கூறிவிட்டார். அதற்கு பாலச்சந்தர் நாளையும் நீங்கள் வந்து நடியுங்கள் நாளையும் நீங்கள் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நடிப்பே வரவில்லை என்று நானே ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

பாலச்சந்தர் இப்படி கூறியது வாலிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது யாரவது ஒருவர் நமக்கு ஒரு விஷயம் வராது என்று கூறினால்தான் அதை வர வைப்பதற்கு மிகவும் முயற்சி பண்ணுவோம். எனவே பாலச்சந்தரே அப்படி கூறிய பிறகு அதிக முயற்சி செய்து மறுநாள் அந்த காட்சியை நல்லபடியாக நடித்து கொடுத்தார் வாலி.

இதை வாலி பேட்டியில் கூறும் பொழுது பாலச்சந்தர் எப்பொழுது எனது தன்மானத்தில் கை வைத்தாரோ அப்பொழுதுதான் எனக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது என கூறி இருக்கிறார்.

என்னோட முதல் ரசிகை ஒரு ஒன்பது வயது பெண்தான்!.. ரஜினிகாந்தை அடையாளம் கண்டுக்கொண்ட சிறுமி!..

Actor Rajinikanth : ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது பாலச்சந்திரிடம் திட்டு வாங்குவது அவருக்கு தினசரி வேலையாக இருந்தது. ஏனெனில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிக்கு தமிழில் பேச வரவில்லை முதலில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வரவில்லை.

அவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் பெரும் ரசிகராக இருந்தார். ரஜினிகாந்த் அவரை போலவே கன்னடத்தில் பெரும் நடிகராக வேண்டும் என்பதற்காக கன்னட பிலிம் இன்ஸ்டிட்யூட்டியில்தான் நடிப்பை கற்க தொடங்கினார். ஆனால் அங்கு ஒரு விஷயமாக வந்த பாலச்சந்தருக்கு ரஜினிகாந்தின் நடிப்பு பிடித்துப் போகவே அவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.

rajinikanth

பாலச்சந்தர் தமிழில் பேசுவது என்பதே கடினமாக இருந்த காரணத்தினால் முதல் படத்தின் போதே வாழ்க்கையை வெறுத்து விட்டார் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் திரைப்படத்தில் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தை ரஜினிக்கு கொடுத்தப்போது அதில் தமிழில் பேசுவது என்பதுதான் அவருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது.

இருந்தாலும் கே.பாலச்சந்தரின் திட்டுகளுக்கு நடுவே அந்த திரைப்படத்தில் நடித்து முடித்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு திரைப்படம் வெளியான பொழுது மிகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி படத்திற்கு சென்றார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அப்பொழுது தாடி இல்லாமல் இருந்ததால் அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. திரைப்படத்தில் உட்கார்ந்து அவர் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவருக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி அந்த திரைப்படத்தில் நடித்திருப்பதே நீங்கள் தானே அங்கிள் என கேட்டது.

அந்த சிறுமிதான் என்னுடைய முதல் ரசிகை என்று ஒரு பேட்டியில் ரஜினி கூறியிருக்கிறார். ஏனெனில் அந்த மொத்த திரையரங்குகளில் இருந்த வேறு யாருமே ரஜினிகாந்தை அடையாளம் கண்டு கொள்ளாத போது அந்த ஒரு  சிறுமி மட்டும் அடையாளம் கண்டு கொண்டது அவருக்கே வியப்பாக இருந்தது என்று கூறுகிறார் ரஜினிகாந்த்.

கடைசி வரை ரஜினியை திருத்த பார்த்தேன்… ஆனா அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்க!. பாலச்சந்தர் பகிர்ந்த உண்மை!.

Actor Rajinikanth: தமிழில் அதிகமாக மார்க்கெட் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது இப்போது வரை குறையவில்லை என்றே கூறலாம்.

ரஜினிகாந்தை நடிகர் ஆக்கியதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கும் முக்கிய பங்குண்டு. கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நிறைய வரவேற்பை ஏற்படுத்தும் படங்களை இயக்கியுள்ளார் கே. பாலச்சந்தர்.

ஆனால் கே.பாலச்சந்தரை பொறுத்தவரை அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். கமல்ஹாசன் நடிப்பையே வெகுவாக விமர்சிக்க கூடியவர் பாலச்சந்தர். இந்த நிலையில் ரஜினிகாந்த் பாலச்சந்தரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தப்போது அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியில்லாமல் இருந்ததை பார்த்தார் பாலச்சந்தர்.

rajinikanth

ஆனால் நடிப்பை பொறுத்தவரை நல்லப்படியாகதான் நடித்தார் என்றாலும் ஒரு நடிகருக்கு வசன உச்சரிப்பும் முக்கியமான விஷயமாகும். இதனால் ரஜினிகாந்திற்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் பலமுறை அவரிடம் தொடர்ந்து வசன உச்சரிப்பை சரி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால் காலப்போக்கில் அதையே ரஜினிகாந்தின் ஸ்டைலாக மக்கள் ஏற்றுக்கொள்ள பாலச்சந்தருக்கு வியப்பாகி போனது. ஒரு நடிகன் நன்றாக நடிக்கிறான் என்றால் வேறு எதையும் மக்கள் கண்டுக்கொள்வதில்லை என்பதை அப்போது பாலச்சந்தர் புரிந்துக்கொண்டார்.

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

Tamil Director Balachandar :  தமிழில் ரஜினி கமல் போன்ற பெரும் நடிகர்களை பிரபலமாக்கியதில் இயக்குனர் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதேபோல நிறைய முக்கியமான புது முகங்களையும் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

எந்த ஒரு நடிகரையும் பார்த்தவுடனேயே அவர் சிறப்பாக நடிக்க கூடியவரா என்பதை பாலச்சந்தர் கண்டுபிடித்து விடுவார் முதன் முறையாக ரஜினிகாந்தை பார்த்த போது கூட இவர் பெரிய ஆளாக வருவார் என்று கூறியவர் பாலச்சந்தர்தான்.

 அதனால் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சினிமாவில் அவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கூட பாலச்சந்தரிடம் அவர்கள் அமைதியாக தான் போவார்கள். பெரும் நடிகர்களுக்கே அப்படியான நிலைமை என்னும்போது உதவி இயக்குனர்களின் நிலை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பொதுவாகவே உதவி இயக்குனர்கள் இயக்குனர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் இந்த நிலையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பாலச்சந்தருக்கும் பெரும் தவறு ஒன்றை செய்தார். பாலச்சந்தர் திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சுரேஷ் கிருஷ்ணா பணியாற்றி வந்தார்.

இந்த சமயத்தில் சுரேஷ் கிருஷ்ணா தனியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது அதை பாலச்சந்திரிடம் கூறாமல் பாலச்சந்தர் மனதில் உறுதி வேண்டும் என்கிற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரை விட்டு தனியாக சென்று விட்டார் சுரேஷ் கிருஷ்ணா.

சென்றவர் கமல்ஹாசனை வைத்து சத்யா என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்திற்கான பூஜையை போடும்பொழுது அதில் கண்டிப்பாக பாலச்சந்தர் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுரேஷ் கிருஷ்ணா.

ஆனால் அவரை வெகு நேரம் காக்க வைத்த பாலச்சந்தர் அவரை பார்ப்பதற்கு வரவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்தவர் சுரேஷ் கிருஷ்ணாவை திட்ட தொடங்கினார். ஒரு படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை பாதியிலேயே விட்டுவிட்டு மற்றொரு படத்திற்கு செல்வாயா உன் சொந்த படமாகவே இருந்தாலும் இப்பொழுது சத்யா படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நீ அடுத்த ரஜினி ஒரு படத்திற்கு அழைத்தால் சத்யா படத்தை பாதியிலேயே விட்டு செல்வாயா இதுதான் ஒரு இயக்குனருக்கு அழகா என்று நேரடியாகவே திட்டிவிட்டார்.

இதனால் மனமுடைந்த சுரேஷ் கிருஷ்ணா பிறகு தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பிறகு பாலச்சந்தரும் சுரேஷ் கிருஷ்ணாவும் ராசியாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஏனெனில் அண்ணாமலை படத்திற்கான பட வாய்ப்பு சுரேஷ்கிருஷ்ணாவிற்கு பெற்றுக் கொடுத்தவரே பாலச்சந்தர்தான். அதன் பிறகு ரஜினியை வைத்து பாட்ஷா என்னும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா.

படப்பிடிப்பில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாலச்சந்தர்!.. அந்த நிலையிலும் படம் எடுக்க அந்த நடிகைதான் காரணம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவிற்கே முன்பே பெரும் இயக்குனராக பார்க்கப்பட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் வித்தியாசமான கதையமைப்பில் வந்த திரைப்படங்களாக இருந்தன.

ஒரே மாதிரியான கதையமைப்பில் படம் எடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சத்தில் படம் எடுத்து வந்தார் பாலச்சந்தர். இருந்துமே பாலச்சந்தர் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்து வந்தன.

இயக்குனர் பாரதிராஜா கூட ஆரம்பத்தில் பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்டார். ரஜினி மற்றும் கமல்ஹாசனை பெரும் நடிகர்களாக்கியதில் பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. இயக்குனராக அவரது வேலையில் மிகுந்த கடமையுணர்ச்சி கொண்டவர் பாலச்சந்தர்.

அவரது இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெள்ளி விழா. இந்த படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் வாணி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திற்காக வாணி ஸ்ரீ மொத்தமே 7 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார்.

எனவே அவருக்கான காட்சிகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் வேர்த்துவிட்டது. இருந்தாலும் முகத்தை துடைத்துக்கொண்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளார் பாலச்சந்தர்.

ஆனால் சுற்றி உள்ளவர்களுக்கு அவருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என தெரிந்துள்ளது. எனவே அவர்கள் மருத்துவர்களை அழைத்துள்ளனர். அங்கு வந்த மருத்துவர் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறி பாலச்சந்தரை அழைத்து சென்றுள்ளனர். அந்த அளவிற்கு தொழிலின் மீது பக்தி கொண்டவர் பாலச்சந்தர்.

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Actor kamalhaasan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரைத்துறையில் ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். பொதுவாக வரும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அதிலேயே இருந்து கொள்வார்கள் அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான விஷயம் என்று கூறலாம்.

அப்படி நடிக்கும் போது மக்கள் பெரிதாக அந்த நடிகர்களிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுக்காமல் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதை பார்க்க முடியும்.

ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஒரு கமர்சியல் கதாநாயகனாக நடித்திருந்தாலும் போகப் போக பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ரிஸ்க் எடுத்து நடித்து காட்டினார் ஹே ராம், குணா, ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் இதில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

இதனால் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பிற்கு பெரும் அங்கீகாரம் பெற்ற நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசனை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். ஆனால் பாலச்சந்திரிடம் அவ்வளவு எளிதாக வாய்ப்பை பெற்று விடவில்லை கமல்ஹாசன்.

அரங்கேற்றம் என்கிற ஒரு திரைப்படத்திற்கு பாலச்சந்தர் இயக்கும்போது அதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முதன்முதலாக கமல்ஹாசன் அவரிடம் போய் சேர்ந்தார். அப்பொழுது உதவி இயக்குனராக வேண்டும் என்பதுதான் கமலஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது.

ஆனால் அங்கு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் பாலச்சந்தர் ஆள் தேடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கமல்ஹாசன் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்ட பொழுது நடிப்பதற்குதான் நான் ஆள் எடுக்கிறேன். உதவி இயக்குனர் தேவையில்லை என்று கூறிவிட்டார் பாலச்சந்தர்.

எனவே அவர் கமல்ஹாசனை உதவி இயக்குனராக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை கமல்ஹாசன் புரிந்து கொண்டார். இருந்தாலும் அதில் நடித்தார் கமல். அந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பை பார்த்த பாலச்சந்தருக்கு இயக்குனர் ஆவதை விட கமல்ஹாசன் நடிகராவது தான் அவரது எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தார் அதன் பிறகுதான் பாலச்சந்தர் கமல்ஹாசனை தொடர்ந்து வளர்த்து விட துவங்கினார்.

பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!.. மயில்சாமி செய்த காரியம்!..

Actor Mayilsamy : தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் மயில்சாமி மிகவும் முக்கியமானவர். பல நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி நிறைய திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். முக்கியமாக நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மயில்சாமி தனக்கான ஒரு தனி உடல் பாவனையை கொண்டிருப்பதால் அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் மயில்சாமி குறித்து ஒரு தகவலை காமெடி நடிகரான பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பெஞ்சமின் திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருப்பார். இவர் இயக்குனர் பாலச்சந்தரிடம் நல்ல பழக்கத்தில் இருந்தார். அந்த சமயத்தில் ரஜினி கமல் மாதிரியான பெரும் நடிகர்களே பாலச்சந்தரிடம் கையை கட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவரிடம் மிகவும் உரிமை எடுத்து பழகக் கூடியவராக மயில்சாமி இருந்திருக்கிறார்.

அவர் பாலச்சந்தருக்கு எதிரில் அமர்ந்து மிகவும் சகஜமாக பேசுவார் என்று கூறுகிறார் பெஞ்சமின். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் ஒரு முறை இதை மயில்சாமியிடமே நேரடியாக கேட்டு இருக்கிறார். பாலச்சந்தர் எவ்வளவு பெரிய ஆள் நீங்கள் என்ன அவரிடம் சரிக்கு சமமாக அமர்ந்து பேசுகிறீர்கள் என கேட்கும் பொழுது அதற்கு பதில் அளித்த மயில்சாமி பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது அவரும் ஒரு மனிதர் தானே ஒரு இயக்குனர் தானே என்று சகஜமாக கூறியிருக்கிறார்.