Connect with us

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

balachandar-rajini

Cinema History

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

Social Media Bar

Tamil Director Balachandar :  தமிழில் ரஜினி கமல் போன்ற பெரும் நடிகர்களை பிரபலமாக்கியதில் இயக்குனர் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதேபோல நிறைய முக்கியமான புது முகங்களையும் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

எந்த ஒரு நடிகரையும் பார்த்தவுடனேயே அவர் சிறப்பாக நடிக்க கூடியவரா என்பதை பாலச்சந்தர் கண்டுபிடித்து விடுவார் முதன் முறையாக ரஜினிகாந்தை பார்த்த போது கூட இவர் பெரிய ஆளாக வருவார் என்று கூறியவர் பாலச்சந்தர்தான்.

 அதனால் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சினிமாவில் அவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கூட பாலச்சந்தரிடம் அவர்கள் அமைதியாக தான் போவார்கள். பெரும் நடிகர்களுக்கே அப்படியான நிலைமை என்னும்போது உதவி இயக்குனர்களின் நிலை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பொதுவாகவே உதவி இயக்குனர்கள் இயக்குனர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் இந்த நிலையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பாலச்சந்தருக்கும் பெரும் தவறு ஒன்றை செய்தார். பாலச்சந்தர் திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சுரேஷ் கிருஷ்ணா பணியாற்றி வந்தார்.

இந்த சமயத்தில் சுரேஷ் கிருஷ்ணா தனியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது அதை பாலச்சந்திரிடம் கூறாமல் பாலச்சந்தர் மனதில் உறுதி வேண்டும் என்கிற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரை விட்டு தனியாக சென்று விட்டார் சுரேஷ் கிருஷ்ணா.

சென்றவர் கமல்ஹாசனை வைத்து சத்யா என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்திற்கான பூஜையை போடும்பொழுது அதில் கண்டிப்பாக பாலச்சந்தர் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுரேஷ் கிருஷ்ணா.

ஆனால் அவரை வெகு நேரம் காக்க வைத்த பாலச்சந்தர் அவரை பார்ப்பதற்கு வரவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்தவர் சுரேஷ் கிருஷ்ணாவை திட்ட தொடங்கினார். ஒரு படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை பாதியிலேயே விட்டுவிட்டு மற்றொரு படத்திற்கு செல்வாயா உன் சொந்த படமாகவே இருந்தாலும் இப்பொழுது சத்யா படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நீ அடுத்த ரஜினி ஒரு படத்திற்கு அழைத்தால் சத்யா படத்தை பாதியிலேயே விட்டு செல்வாயா இதுதான் ஒரு இயக்குனருக்கு அழகா என்று நேரடியாகவே திட்டிவிட்டார்.

இதனால் மனமுடைந்த சுரேஷ் கிருஷ்ணா பிறகு தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பிறகு பாலச்சந்தரும் சுரேஷ் கிருஷ்ணாவும் ராசியாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஏனெனில் அண்ணாமலை படத்திற்கான பட வாய்ப்பு சுரேஷ்கிருஷ்ணாவிற்கு பெற்றுக் கொடுத்தவரே பாலச்சந்தர்தான். அதன் பிறகு ரஜினியை வைத்து பாட்ஷா என்னும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top